பெரம்பலூர் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் கூட்டம் நடைபெற உள்ளது, கலெக்டர் தகவல்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் திருச்சி மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை தலைமையில் வரும் 21.02.2025 அன்று காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அது குறித்த மனுக்களை இரண்டு பிரதிகளில் வருகின்ற பிப்ரவரி 11. ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அளிக்கலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வருகின்ற பிப்ரவரி 21. அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் கிரேஸ்‌ பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *