பள்ளிகல்வித்துறை சார்பாக திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின நீச்சல் போட்டிகள் ஜனவரி 22 முதல் 26 வரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீச்சல் குளத்தில் நடைபெற்றது.

மதுரை நீச்சல் வீரர்கள் தங்கம்7,வெள்ளி1,வெண்கலம் 15 என மொத்தம் 23 பதக்கங்கள் வென்றனர்.14 வயதிற்குட்பட்ட பிரிவில் சி.இ.ஒ.ஏ பள்ளி மாணவர்கள் ஹர்ஷன் 50மீ பேக் ஸ்டோர்க், 4×100 மீட்டர் ரிலே வெண்கலம், அரவிந்த்பிரசாத் 4×100 மீட்டர் ப்ரிஸ்டையில் தங்கம், விஸ்வாசன், ஆகாஷ் 4×100 மீட்டர் பிரிஸ்டைல் வெண்கலம்,
நல்லமணி பள்ளி மாணவிகள் சாதனாஸ்ரீ,ஹாஷினி, கனிஷ்கா,
ஹிரானிகா 4×100 மீட்டர் பிரிஸ்டைல் ரிலே வெண்கலம்.
17 வயதிற்குட்பட்ட பிரிவில் சி.இ.ஒ.ஏ பள்ளி மாணவன் பவித்ரன் 4×100 மீ பிரிஸ்டைல் தங்கம், சிஇஒஏ பள்ளி மாணவிகள் தான்யாஸ்ரீ 100 மீட்டர் பேக்ஸ்டோக்,50 மீ பேக்ஸ்டோர்க் வெண்கலம்,4×100 மீ ப்ரிஸ்டையில் ரிலே தங்கம், 4×100மீ ஐ.எம் ரிலே தங்கம், கார்த்திகா,
சுபதக்க்ஷனா 4×100 ஐ.எம் ரிலேயில் தங்கம், சென்ஜோசப் பள்ளி மாணவி பூஜாஸ்ரீனி 4×100 மீ பிரிஸ்டைல் தங்கம்
19 வயதிற்குட்பட்ட பிரிவில் நல்லமணி மாணவி தமிழினி 400மீ பிரிஸ்டைல் வெள்ளி, 200மீ பேக்ஸ்டோர்க் வெண்கலம், 4×100மீ பிரி ஸ்டைல் ரிலே வெண்கலம்,அதே பள்ளியை சார்ந்த மாணவிகள் ராஜஸ்ரீ, மலையரசி,அழகுநாச்சி 4×100மீ பிரிஸ்டைல் வெண்கலம் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன் ,
மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட நீச்சல் சங்க தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ்,செயலாளர் கண்ணன்,
பொருளாளர் அமிர்தராஜ்,பயிற்சியாளர்கள் விஜயக்குமார்,
பறங்குன்றம்,நல்லமணி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஷீபா ஆகியோர் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *