கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் அரசு பள்ளி 10ஆம் வகுப்பு வகுப்பறைக்குள் மனித மலத்தை வீசி சென்ற மர்ம நபர்கள்….
மலங்களை வீசி சென்றது யார் என பல்லடம் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 200 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்
இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்ததும் வகுப்பறைகளை பூட்டிவிட்டு சென்றுள்ளனர் இன்று காலை பள்ளி திறந்தவுடன் வகுப்பறைகளை ஆசிரியர்கள் திறந்து உள்ளனர்
அப்போது பத்தாம் வகுப்பு வகுப்பறையில் சுவர் மற்றும் பள்ளி மாணவர்கள் அமரும் இருக்கைகள் முழுவதும் மனித மலங்கள் வீசப்பட்டிருந்தது தலைமை ஆசிரியர் உடனடியாக காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வகுப்பறை முழுவதும் வீசப்பட்டுள்ள மனித மலங்களை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மனித மலங்களை வீசியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.