துறையூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கு
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் 29/01/2025 அன்று நெடுஞ்சாலை துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.ஜனவரி 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதனை தொடர்ந்து தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை பாலக்கரையில் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் கொடி அசைத்து தொடக்கி வைத்தார். இப்பேரணி பாலக்கரையில் தொடங்கி திருச்சி ரோடு வழியாக முசிறி பிரிவு ரவுண்டானா சென்று பேருந்து நிலையம் வழியாக பயணியர் மாளிகை வந்து அடைந்தது.
இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் திருச்சிராப்பள்ளி சாலை பாதுகாப்பு அழகு கோட்ட பொறியாளர் புவனேஸ்வரி தலைமையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் துறையூர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) உதவி கோட்ட பொறியாளர் கோ நல்லதம்பி முன்னிலை வகித்தார்.க(ம)ப உதவி பொறியாளர் ஜெ சோலைமுருகன் , திருச்சி சாலை பாதுகாப்பு அலகு உதவி பொறியாளர் (நெ) கார்த்திகா ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
கோட்ட பொறியாளர் புவனேஸ்வரி சாலை பாதுகாப்பு பற்றி மாணவர்களிடையே சிறப்பாக உரையாற்றினார்.அப்போது இருசக்கர வாகனங்களால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது.சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் அதனை மாற்றுவதற்கு சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உதவி காவல் ஆய்வாளர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு பேசுகையில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் தொகை பற்றி எடுத்துரைத்து, மாணவர்களாகிய நீங்கள் உங்கள் அப்பாவிடமும் சகோதரர்களிடமும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து பாதுகாப்பாக வாகனங்கள் இயக்க வலியுறுத்துங்கள் என்று கூறினார்.
இந்நிகழ்வில் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் சுரேஷ், விசுவாசம், சத்தியசீலன், ராஜேந்திரன், அன்பழகன், பஞ்சவர்ணம் மற்றும் அலுவலக ஊழியர்கள்,சாலை பணியாளர்கள்,
கிழக்குவாடி எஸ்எம்கே கலைக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி பேராசிரியர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் அப்துல்லா மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
கண்காணிப்பாளர் (நெ) க(ம)ப பாலசுப்பிரமணியன் நன்றி உரை ஆற்றினார்.தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு நினைவு பரிசாக பேனா வழங்கப்பட்டது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்