கரூர் செய்தியாளர் மரியான் பாபு

76 ஆவது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்டம் வெண்ணமலையில் அமைந்துள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 76 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற முதல்வர் பழனியப்பன் வரவேற்புரையாற்றியும், தேசிய கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் தாளாளர் பாண்டியன் முன்னிலை வைத்தார். பள்ளியின் செயலாளர் பெரியசாமி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.