எபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.

குன்னம் சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்.ஜன.29. பெரம்பலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் ஊராட்சி தலைவர் செயலாளர் பொருளாளருகான கலந்தாய்வுக் கூட்டம்
(குன்னம்) தனியார் மண்டபத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் செயற்குழு உறுப்பினர் அனுக்கூர் ராஜேந்திரன்,அமைப்பு தலைவர் மருதவேல்,பொருளாளர் அம்சவள்ளி. ஒன்றிய செயலாளர்கள் பிரபு, சுதாகர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சி யின் மாநில தேர்தல் ஆணையர் குழு உறுப்பினர் எம்.பி.சதாசிவம்.டெல்டா மாவட்ட பொருளாளர் எஸ்.ஏ. அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் தமிழ் ஒளி .மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி. தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் வீரமுத்து, மாவட்ட மாணவரணி தலைவர் செல்வகுமார், ஒன்றிய தலைவர்கள், பாபு, கணேசன் மற்றும் வேப்பூர் தெற்கு மற்றும் மேற்கு ஊராட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதியில் வெற்றி பெறுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் புதிய பதவி ஏற்ற ஊராட்சி தலைவர், செயலாளர், பொருளாளர் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .