விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் கிராமத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் ஆய்வு நடத்தினார் முகவூர் கிராமத்தில் உள்ள பள்ளி மைதானம் ,காலை உணவு வழங்கும் திட்டம், அங்கன்வாடி கட்டிடங்கள், ரேஷன் கடை உள்பட பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, ராஜபாளையம் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ஜெயராமன் மற்றும் வசந்தகுமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.