தி.உதயசூரியன்.டைம்ஸ் ஆஃப்தமிழ்நாடு. வாடிப்பட்டி செய்தியாளர். செல் : 8098791598.
அலங்காநல்லூர் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு மற்றும் அலுவலகம் திறப்பு விழா
அலங்காநல்லூர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு மற்றும் அலுவலகத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா, குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில்
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், வாடிப்பட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் மாலா, கிராம நிர்வாக அலுவலர் மதன்குமார், திமுக ஒன்றிய செயலாளர் தனராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர செயலாளர் ரகுபதி, பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத்தலைவர் சுவாமிநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.