கரூர் செய்தியாளர் மரியான் பாபு
தேசிய சாலை பாதுகாப்பு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார் .கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற 36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா IPS துவக்கிவைத்து இப்பேரணியில் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
பேரணியில் மாணவ, மாணவிகள் சாலை விழிப்புணர்வு சம்மந்தமான பதாகைகளை ஏந்தி சென்றனர். இப்பேரணியானது தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துவங்கி தாந்தோணிமலை பேருந்து நிறுத்தத்தில் முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் கரூர் நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், வட்டார போக்குவரத்து அலுவலர், தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மாணவ , மாணவிகள் பலர் ககலந்து கொண்டனர்.