திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழநாகை கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ ஆகாச காளியம்மன் கோவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை மகா கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் தொடர்ந்து முதல் கால யாக பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து கோ பூஜை மகா பூர்ணாகுதி நடைபெற்றது .
அதனைத் தொடர்ந்து தீட்சதர்கள் மங்கள வாத்தியங்களுடன் யாகசாலையில் இருந்து புனித கடங்களை தலையில் சுமந்தவாறு ஆலயத்தை சுற்றி வலம் வந்து ஆலய விமான கோபுரத்தை வந்தடைந்து.
கடங்களில் இருந்த புனித நீர் விமான கோபுரத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.அதைத் தொடர்ந்து மூலவர்கள் முருகன் மற்றும் விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர்