கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர்
நல உயர்நிலைப் பள்ளியில் சாரண, சாரணியர் இயக்கத்தை சேர்ந்த மாணவ, மாணவி களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட சாரண, சாரணியர் இயக்க செயலாளர் கணபதி 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.
முன்னதாக பள்ளியின் தலைமை யாசிரியர் ரமேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். பயிற்சி முடிவில் உடற்கல்வி ஆசிரியர் கமலஹாசன் நன்றி கூறினார். பின்னர் மாலையில், பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
இதில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் விளையாட்டுப் போட்டி கட்டுரைபோட்டி, பேச்சுப் போட்டி போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் கவிதா மற்றும் ஜீவா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
இந் நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கருத்துடையான் மற்றும் உறுப்பினர் பூமிநாதன்,
ஆசிரிய, ஆசிரியைகள்
கலந்து கொண்டனர்.