எ.பி. பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
கீழப்புலியூரில் கட்சி கொடியை ஏற்றி வைத்த அமைச்சர்கள் கணேசன், சிவசங்கரன்.
பெரம்பலூர்.ஜன.30. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொழிலாளர் நலன் திறன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் ஆகியோர் அரசு நிகழ்ச்சிகளிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் ஒன்றியம், கீழப்புலியூர் ஊராட்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் அவர்கள் கழக கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், வேப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தி.மதியழகன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர், கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்..