பிரபு
காங்கேயம் செய்தியாளர்
செல்:9715328420
காங்கேயம்,
சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் தைப்பூசத்தேர் திருவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டம் வரும் பிப்ரவரி 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் மலைமீதுள்ள மண்டப கூட்ட அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஃபெலிக்ஸ் ராஜா தலைமை தாங்கினார், காங்கேயம் தாசில்தார் மோகனன், கோவில் செயல் அலுவலரும் உதவி ஆணையருமான இரத்தினாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இதில் தேரோட்டம் நடைபெறும் நாட்களில் கிரிவலப்பாதை மற்றும் பக்தர்கள் கூடும் இடங்களில் சுகாதாராம் பேன கூடுதல் பணியாட்களை நியமிப்பது, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிரிவலப்பாதை மற்றும் ஏனைய இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்துவது, போலீசார்கள் பாதுகாப்பு பணியில் 500 பேர் ஈடுபடுத்துவது, பக்தர்களின் மருத்துவ வசதிக்காக இரண்டு மருத்துவ வாகனங்களை தயார் நிலையில் வைப்பது, மலையடிவாரத்தில் நெரிசலைக் குறைக்க தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பக்தர்கள் கோவிலுக்கு சிரமமின்றி வந்து செல்ல கூடுதல் பஸ்களை போக்குவரத்துதுறை மூலம் இயக்குவது, மலைமீது கோவிலுக்கு செல்ல கோவில் பஸ்களை மட்டுமே இயக்குவது, உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள் உள்ளிட்ட பொருட்களை கடைக்காரர்கள் பய்னபடுத்தக்கூடாது கடைகள் ஏலம் எடுப்பவர்களிடம் இதை கண்டிப்பாக சொல்ல வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ரசாயனம் கலந்த வண்ண போடிகளை பயன்படுத்தி உணவு பண்டங்களை தயாரித்து விற்பனை செய்யக்கூடாது எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
இதில் காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன், காங்கேயம் பீடிஒ அனுராதா, நெடுஞ்சாலை துறை, மருத்துவதுறை, பொதுப்பணித்துறை, மின்வாரியதுறை, போக்குவரத்துதுறை, தீயணைப்பு துறை நிலை அலுவலர் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புட்நோட் சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா, குறித்து ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.