பல்லடம் அருகே போலி நாகமாணிக்க கற்கள் விற்பனை செய்ய முயன்ற பெண் உட்பட 7 பேர் கைது – பல்லடம் போலீசார் நடவடிக்கை……..
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சின்ன வடுகபாளையத்தை சேர்ந்தவர் சரண்யா (35).இவரும் திருவாரூரை சேர்ந்த ராஜாராமன் (49) என்பவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.ராஜாரமின் நண்பரான தஞ்சாவூரை சேர்ந்த தமிழ்மாறன் தன்னிடம் நாக மாணிக்க கற்கள் உள்ளதாகவும் அதனை விற்க வேண்டும் என ராஜாராமிடம் கூறியுள்ளார்.அதன் மதிப்பு பல கோடி ரூபாய் என கூறியுள்ளார்.
இதனை அடுத்து சரண்யாவை தொடர்பு கொண்ட ராஜாராமன் இது குறித்து கூறியுள்ளார்.பல கோடி ரூபாய் மதிப்புள்ள நாக மாணிக்க கற்களை ஒரு கோடி ரூபாய்க்கு தருவதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து சரண்யா அதனை விற்பனை செய்து தருவதாக கூறியதை அடுத்து ராஜாராமன்,தமிழ்மாறன் உள்ளிட்ட சிலர் பல்லடம் வந்து தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
இன்னிலையில் போலி நாக மாணிக்க கற்களை விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல் வந்திருப்பதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன் தலைமையில் பல்லடம் போலீசார் தனியார் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
மேற்கு பல்லடத்தில் உள்ள தனியார் விடுதியில் சோதனை செய்த போது தஞ்சை மற்றும் திருவாரூரில் இருந்து வந்தவர்கள் அங்கு தங்கியிருந்தது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்த போது அவர்கள் தஞ்சாவூரை சேர்ந்த தமிழ்மாறன் (41),உதயகுமார் (37),ஐய்யப்பன் (34),வெங்கடேஷ் (34),திருவாரூரை சேர்ந்த ராஜாராமன் (49) உதயசந்திரன் (32) என்பது தெரியவந்தது. மேலும் சரண்யா மூலம் போலி நாக மாணிக்க கற்களை விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது.அதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த பல்லடம் போலீசார் போலி நாக மாணிக்க கற்களை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.போலி நாக மாணிக்க கற்களை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.