தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 30 ஆவது விளையாட்டு விழா கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் என் எம் ஆர் வசந்தன் கல்லூரி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் எம் கோபாலகிருஷ்ணன் எஸ்.பொன்ராம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா அனைவரையும் வரவேற்றார்

இதனைத் தொடர்ந்து மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் கல்லூரி பேராசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன உடல் கல்வி பேராசிரியை ஆர் சூர்ய பிரபா நன்றி கூறினார் கல்லூரி விளையாட்டு துறை பொறுப்பு ஆசிரியர்கள் டாக்டர் எஸ் சுசீலா உடற் கல்வி கல்வி பேராசிரியை ஆர் சூர்ய பிரபா மற்றும் வி. முனீஸ்வரி ஜி. நிர்மலா தேவி நிகழ்ச்சியை ஒருங்கிணத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *