தூய்மை பணியாளருக்கு மாலை அணிவித்து பாராட்டிய காவல் ஆய்வாளர்
பல லட்சம் மதிப்பிலான வெள்ளி தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் பகுதியைச் சேர்ந்த துரை என்ற திருவாரூர் நகராட்சியை சேர்ந்த தூய்மை பணியாளர் காலையில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது 20 பவுன் நகை மற்றும் முக்கால் கிலோ வெள்ளி அடங்கிய பை ஒன்றை பார்த்தார் அதனை உடனடியாக திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் இந்த நிலையில் சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆலத்தம்பாடி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு ராதாகிருஷ்ணன் அவரது குடும்பத்தினர்கள் அதிகாலை ரயிலில் திருவாரூர் வந்து அங்கிருந்து ஆட்டோவில் திருவாரூர் நகர் பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டில் குளித்து பிரஷ அப் ஆகிவிட்டு மீண்டும் அதே ஆட்டோவில் கிரக பிரவேசத்திற்கு சென்று உள்ளார்கள்.
ஆனால் அங்கு பார்த்தால் அவர் வாங்கி வந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் முக்கால் கிலோ வெள்ளி பொருட்கள் காணவில்லை உடனடியாக திருவாரூர் நகர காவல் நிலையத்தில் வந்து புகார் அளித்துள்ளார்.
அதற்கு முன்னதாகவே தூய்மை பணியாளர் துரை தங்க மற்றும் வெள்ளி பொருட்களை திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். திருவாரூர் தியாகராஜர் கோவில் அருகில் உள்ள வீதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது துரை அந்த தங்க மற்றும் வெள்ளி பொருட்கள் அடங்கிய நகை பையை பார்த்து அதனை எடுத்து திருவாரூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.
இதனால் மனமகிழ்ந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் துரையை அழைத்து நன்றி தெரிவித்தார்கள் மேலும் திருவாரூர் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் துரைக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளார் இந்தb நெகிழ்ச்சியான சம்பவம் திருவாரூரில் அரங்கேறி உள்ளது