தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில்
மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையி
ல் நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் 211 பயனாளிகளுக்கு ரூ.36 இலட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுதாரர்கள் 2 பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுதாரர்கள் 2 பயனாளிகளுக்கு ரூ 30.000 மதிப்பில் வீட்டு மனைகளும், ஆதிதிராவிடர் மக்களுக்கு 66 பயனாளிகளுக்கு ரூ 10,04000 மதிப்பில் புதிய வீட்டுமனை , ஆதிதிராவிடர் மக்களுக்கு இணைய வழிப் பட்டா ரூ.3,30,000 மதிப்பில் 33 பயனாளிகளுக்கும், ஆதிதிராவிடர் மக்களுக்கு நத்தம் கணினி சிட்டா ரூ.22,74,000 மதிப்பில் 103 பயனாளிகளுக்கும். ஆதிதிராவிட மக்களுக்கு இலவச தையல் இயந்திரம் ரூ.33,450 மதிப்பில் 5 பயனாளிகளுக்கும் மொத்தம் ரூ.36,71,450 மதிப்பில் 211 பயனாளிகளுக்கும் வழங்கி உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் பேசும் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். கல்வியில் முழு கவனம் செலுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும். முதலமைச்சர் குழந்தைகள் படிப்பில் உயர தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணாக்கர்கள் இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன்
மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், மாநகராட்சி துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, வருவாய் கோட்டாட்சியர் செ.இலக்கியா, முதன்மை கல்வி அலுவலர் இரா.அண்ணாதுரை,மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.ரவிச்சந்திரன், விடுதி காப்பாளர் பாலையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.