திண்டுக்கல் நகர் புனித மரியன்னை மேல் நிலைப்பள்ளி,ஆங்கில வழிக் கல்வி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழா பேராசிரியர், முனைவர். வேளாங்கண்ணி சிரில் ராஜ். கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை,டாக்டர் எம் ஜி ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சென்னை தலைமையில், இயேசு சபை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் அதிபர் அருள்பணி.மரிவளன் சே.ச,தாளாளர் அருள் பணி.மரியநாதன் சே.ச மற்றும் பல்வேறு அருட் தந்தையர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
இவ்வாண்டு விழா கொண்டாட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட் பணி.ஆரோக்கிய தாஸ் சே.ச,கூடுதல் உதவி தலைமை ஆசிரியர்கள்.மரிய லுயிஸ் சேகர்,ஜான் டேவிட்,பெரர் நோயல், ஆசிரியர் சங்க செயலாளர்.பிரிட்டோ அமல்ராஜ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி இயக்குனர் அருட் பணி.ஞானராஜ் சே.ச ஆண்டறிக்கையுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முனைவர், பேராசிரியர். வேளாங்கண்ணி சிரில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை டாக்டர் எம் ஜி ஆர் கல்வி, ஆராய்ச்சி நிலையம், மாணவர்களுக்கு முன்னேற்ற வழியில் செல்வதற்கான வழி முறைகளைக் கூறி அவர்களை நெறி படுத்தினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட் பணி.ஆரோக்கிய தாஸ் சே.ச மாணவர்களை உற்சாக படுத்தும் விதமாக சிறப்புரை ஆற்றினார். பள்ளி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சியுடன்,நன்றி உரையாற்றினர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் அருள் பணி.ஞானராஜ் சே.ச,அருள் பணி.தெரசு நாதன் சே.ச மற்றும் ஆசிரியர்கள் , அலுவலர்கள் , பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.