கோவை மாவட்டம் வால்பாறையில் 2026 சட்டப்பேரவையை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வால்பாறை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து கட்சிப்பணியை துரிதப்படுத்தி வரும் நிலையில் வால்பாறையில் பல்வேறு கட்சியை சேர்ந்த பலர் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்
அதேபோல இன்று நகரச்செயலாளர் மயில் கணேசன் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர் லட்சுமணசிங், நகர துணைச் செயலாளர் எஸ்.பி.பொன்கணேசன் ஆகியோர் முன்னிலையில் முன்னால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.தங்கவேலின் அண்ணன் மகள் மருத்துவர் தயாநிதி மற்றும் கல்லூரி பேராசிரியர், பொறியாளர் உட்பட சுமார் இருபது பேர்கள் அதிமுகவில் இணைந்தனர் அவர்கள் அனைவருக்கும் சால்வை மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பாக வரவேற்பு அளித்தனர்
வால்பாறை நகரச்செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் வழக்கறிஞர் ஆர்.ஆர்.பெருமாள், நிர்வாகிகள் ஸ்ரீ ராம் கேஸ் பொன்னையா, எம்.ஆர்.எஸ்.மோகன், எஸ்.கே.எஸ்.பாலு,லோகேஷ், பழனி மற்றும் பலர் உடனிருந்தனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்