
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா நடைபெற்றது .
ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் மற்றும் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் கலா ஆகியோர் மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார்கள்.ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.மாணவர்களின் சாலை போக்குவரத்து தொடர்பான ஏராளமான கேள்விகளுக்கு காவலர்கள் பதில் கூறினார்கள்.பெற்றோர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.