C K RAJAN
Cuddalore District Reporter
9488471235
கடலூர் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு..
.
கடலூர் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகத் திருக்குறள் பேரவை மூலமாக திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியை திருமதி ஆர். பிரேமலதா தலைமை தாங்கி தலைமையுரை யாற்றினார்.
ஆசிரியை திருமதி செலின் மேரி அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.
உலகத் திருக்குறள் பேரவையின் மாவட்ட தலைவர் தமிழ் அரிமா பா மொ. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
தமிழ் ஆசிரியை திருமதிஅசுந்தா,நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்து வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்து வினாடி வினாவும் நடத்தப்பட்டது.
செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் அருட் சகோதரி திருமதி மாசிலாமரி மாணவிகளின் தமிழ் புலமையை, திருக்குறளை ஒப்புவிக்கும் படிக்கும் திறனை அதிகப்படுத்த அவரது பள்ளியில் இடம் கொடுத்து வாய்ப்பு கொடுத்தமைக்கு பேரவை சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.
. விழாவில் மாணவிகளும் ஆசிரியர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். இறுதியாக தமிழ் ஆசிரியை திருமதிஅந்தோணியம்மாள் லில்லி நன்றியுரை வழங்கினார்.