வால்பாறை கக்கன்காலனியில் திடீர் தீ விபத்து குடியிருப்பு எரிந்து சேதம்
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கக்கன்காலனி பகுதியில் குடியிருந்து வரும் லோகியம்மாள் க/ பெ.கிருஷ்ணசாமி லேட் என்பவர் வால்பாறை பூ மார்க்கெட் முன்புறம் பொரிகடலை மற்றும் பூஜை சாமான்கள் கடை வைத்துள்ளார் இவர் வழக்கம்போல இன்று கடைக்கு சென்று விட்ட நிலையில் இவரின் வீட்டில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்துள்ளது
இதையறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் துரிதமாக தண்ணீர் எடுத்து ஊற்றி நீண்ட போராட்டத்திற்கு பின்பு தீயை அனைத்துள்ளனர் இச்சம்பவத்தால் வீட்டில் இருந்த பீரோ உள்ளிட்ட பொருட்களும், ஆவனங்களும் பணமும் தீயில் எரிந்து சேதமானது
இந்நிலையில் சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற பெரிய தீயணைப்பு வாகனம் செல்லமுடியாத வகையில் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்திருந்ததால் தீயணைப்பு துறையினர் எந்த வழித்தடத்திலும் செல்ல முடியவில்லை மேலும் வால்பாறை மலை பிரதேசமாக இருப்பதால் சிறிய வகையான தீயணைப்பு வாகனம் வழங்கி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுமக்களிடையே இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது