விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மரக்கார் பிரியாணி என்ற பெயரில் கடை நடத்தி வந்த கங்காதரன் என்பவர் தனது பிரபலமான பிரியாணி வியாபாரத்திற்கு விநியோகஸ்தர் உரிமை கொடுப்பதாக தமிழ்நாடு கேரளா ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த 250 பேரிடம் டெபாசிட் பெற்று பலகோடி கோடி ரூபாய் வரை மோசடி செய்ததோடு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து ஏமாந்தவர்களை அதிரிச்சியடைய வைத்த சம்பவம்,நடந்துள்ளது ராஜபாளையம் நீதிமன்ற வளாகம் முன்பு குவிந்த மக்களால் ராஜபாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே சங்கரன்கோவில் சாலையில் கங்காதரன் (45) என்பவர்
மரக்கார் பிரியாணி என்ற பெயரில் கடை ஒன்றை ஆரம்பித்தார். அந்த தொழில்நுட்பம் மற்றும் இதர முறைகளை கூறி ஆங்காங்கே பிரான்சிஸ் தர இருப்பதாகவும் கூறி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், பல வழிகளிலும் விளம்பரம் செய்தார். மேலும் முக்கிய நகரங்களில் நேரடியாக இவர் நபர்களை நியமித்து டெபாசிட் வாங்கினார். ஒரு கடைக்கு ரூபாய்
5 லட்சம் முதல்.10 லட்சம் லட்சம் வரை தகுதிக்கு தகுந்தார் போல் நிர்ணயம் செய்து பனத்தை திரட்டினார்.
ஒருவரிடம் கூட பணத்தை ரொக்கமாக பெறாமல் ஆன்லைன் மூலமாகவும் இதர வழிமுறைகள் மூலமாகவும் பண பரிமாற்றம் நடத்தினார். ஒரு மாத காலமாக இவர் டெபாசிட் தொகையாக சுமார் 250 பேரிடம் ரூபாய் 20 கோடி வரை பெற்றதாக தெரிய வருகிறது.
இவரிடம் தொழில்முறை விவரங்கள் கேட்டபோது விரைவில் கூறுவதாக கூறி தாமதம் செய்து வந்திருக்கிறார்.
பனம் கொடுத்த சிலர் இவர் கடையை நேரடியாக பார்க்க வேண்டும் என்று ராஜபாளையம் வந்து போன் செய்தபோது இவர் நேரில் வரக்கூடாது எனவும் எங்களது பிரதிநிதிகள் வந்து விவரங்களை கூறுவார்கள் என்றும் பதிலளித்து அனைவரையும் திருப்பி அனுப்பியதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் ராஜபாளையம் நீதிமன்றத்தில் கங்காதரனே வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் தான் வியாபாரத்திற்க்காக சிலரிடம் முன்பனம் பெற்றதாகவும் ஆனால் அவர்கள் எனது வியாபாரத்தை நடத்தவிடாமல் தொல்லை தருவதாகவும் பதிவு செய்த வழக்கின் பேரில் நீதிமன்றத்தில் இருந்து 239 பேருக்கு சமன் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.
கங்காதரன் விவகாரம் குறித்து 31 ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அந்த சமனில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் பேரில் நான்கு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 150, பேர் வரை இன்று ஒரே சமயத்தில் ராஜபாளையம் நீதிமன்றத்தில் குவிந்தனர். இதன் காரணமாக பரபரப்பு காணப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப் பிற்காக குவிக்கப் பட்டிருந்தனர்.
இவர்களுக்கு மார்ச் 4ஆம் தேதி வாய்தா போட்டிருப்பதாக நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது,
இதனால் அதிரிச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்களை போலிசார் காவல் நிலையம் அழைத்துவந்து அனைவரிடமும் தெற்கு காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டது,
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில் ஏதாவது தொழில் செய்து பிழைப்பு நடத்தலாம் என்று வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்து நம்பிக்கையுடன் காத்திருந்த நாங்கள் ஏமாந்தது போதாதென்று நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து,குற்றவாளிகளைப்போல்,ஆஜராகி வாய்தா பெற்றுள்ள கொடுமையை எங்கே போய் சொல்வது என்று வேதனையை தெரிவித்தது கான்போரை கலங்க வைத்துள்ளது.