செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியம், தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலம் ஆரோக்கியத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் க.வாசு தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் ரா.செந்தமிழ், ம.பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
சிறப்பு அழைப்பாளராக, திருவண்ணாமலை மாவட்ட ரெட்கிராஸ் சங்கத் தலைவர் பா.இந்திரராசன் பங்கேற்று உடல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மலர் சாதிக், ரயில்வே சு.தனசேகரன், வந்தை குமரன், ஜா.தமீம், அ.ஷாகுல் அமீது உள்ளிட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இறுதியில் உதவி ஆசிரியர் ச.திலகவதி நன்றி கூறினார்.