நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஒரே நாளில் மதுக்கடைகள் மூடப்படும் என தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் பகுதியில் மகளிர் உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் சௌமியா அன்புமணி பேச்சு.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் பகுதியில் பாமக சார்பில் தமிழகம் மகளிர் உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டத்திற்கு அன்புமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது
இந்த பகுதியை பார்த்தால் நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு என்ற பாடல் தான் ஞாபகம் வருகிறது. உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்களுக்கு என்றும் நான் கடன் பட்டிருக்கேன்.
கடந்த 2014-ல் அன்புமணி போட்டியிடும்போது, நடந்தே சென்று வாக்கு சேகரித்தேன். கடை கடையாக உங்களுடன் சென்று வாக்கு சேகரித்தேன். ஆட்சியாளர்கள் மறந்து போன மாவட்டம் தான் தருமபுரி. தேர்தலின் போது வருவார்கள். திட்டத்தை வாரி வாரி கொடுப்பார்கள். ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள். தருமபுரி மாவட்டத்திற்கு நல்ல திட்டங்களை அன்புமணி தான் கொண்டு வந்தார்.
கிராமப் புறங்களில் உள்ள மக்களுக்கு உயர் தர சிகிச்சை மருத்துவமனையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான், ஊசி ஒருமுறை பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். அமெரிக்காவில் ஒரே நம்பருக்கு போன் பண்ணும் திட்டத்தை பார்த்து, 108 என்ற நம்பருக்கு போன் செய்தால், மருத்துவ சிகிச்சை வழங்க அவசர ஊர்த்தி வரும் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். 1350-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒரு ஆம்புலன்ஸ் இன்று பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள கிராமத்திற்கு வீட்டிற்கே வருகிறது.
தொப்பூர் கணவாய் சாலை மிகவும் ஆபத்தானது. இதில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும். இந்த சாலை நேர் படுத்த வேண்டும் என்பதற்காக எம்பியாக இல்லாமல் இருந்தாலும் கூட, எம்எல்ஏக்களை அனுப்பி வைத்து, மத்திய அமைச்சரை தொடர்ந்து சந்தித்து தற்போது தொப்பூர் விபத்து சாலை நேர்ப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாலை பணி முடிந்தவுடன், இனி விபத்து நடைபெறாது. தருமபுரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து திட்டங்களும் பாமக தான் கொண்டே வந்தது. கடத்தூர் பகுதியில் ஏரியை காணவில்லை. இந்த ஏரியை மீட்க வலியுறுத்தி, இங்குள்ள வனிகர்கள் அன்புமணியை சந்தித்தனர். உடனை இந்த ஏரி மீட்கப்பட்டது.
நானும் இந்த மாவட்டத்து பெண்ணாக மாறிட்டேன். என் மகள்களுக்கும் நீங்கள் காட்டிய அன்பும், பாசமும் அதிகமாக கொடுத்ததால் என் மகள்களும் இந்த மாவட்ட பிள்ளைகளாக மாறிவிட்டனர். பெண்கள் எல்லா விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஆண்கள் நம்மை மட்டமாக நினைப்பார்கள். நம் பேச்சை கேட்கமாட்டார்கள்.
தருமபுரியில் பனைமரம் காய்ந்து வருகிறது. இதற்கு காரணம் தண்ணீர் இல்லாதது தான். பனை மரம் நிலத்தடியில் எவ்வளவு கீழ் இருந்தாலும் எடுத்துக் கொள்ளும். ஆனால் தண்ணீர் இல்லாததால், இப்பொழுது அந்த பனை மரமே காய்கிறது. உழைக்கும் ஆண்களை எப்பொழுதும் போதையின் பிடியிலே மயக்கத்திலே வைத்திருக்கிறார்கள். நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்கள். அன்புமணி பின்னால் பெண்கள் அனைவரும் நிற்க வேண்டும்.
நல்ல திட்டங்களை கொடுப்பார். நீர்வளத்திற்கு ஒரு அமைச்சர், தோட்டக்கலை துறைக்கு ஒரு அமைச்சர், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த ஒரு அமைச்சர் என வேளாண்மை துறை மூன்று அமைச்சர்களை ஒதுக்க வேண்டும். நகர பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. பேருந்து நிலையம் மக்களுக்கு பயனுள்ள வகையில், நகர் புறங்களுக்கு மத்தியில் இருக்க வேண்டும். ஆனால் கல்வி நிலையங்கள், மருத்துவமனை, அரசு அலுவலகங்களுக்கு அருகில் இருக்க வேண்டும். இரண்டு பேருந்து நிலையத்தை, வழிநடத்த வேண்டும் என்பதை அதிகாரிகள் யோசிக்க வேண்டும். ஆனால் ஒரே இரவில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாம் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் ஒரே நாளில் மதுக்கடைகள் மூடப்படும் என தெரிவித்தார்.