தாராபுரம்
செய்தியாளர் பிரபு
செல்:9715328420
புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழா
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சூரிய நல்லூர் கிராமம் புறவழிச்சாலை வேங்கிவளையம் பிரிவு அருகே ஹால்மார்க் ஏஜென்சி மூலம் புதியஇந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடந்தது.
வேங்கிபாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட இந்தியன் ஆயில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையத்தை சமூக சேவகர் என். பழனிச்சாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, டீசல் நிரப்ப வந்த விவசாயி ஒருவருக்கு பச்சை தூண்டில் தலப்பா க்கட்டி வரவேற்று டீசல் நிரப்பினார். அதன் பிறகு அவருக்கு இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து அதே இடத்தில் பெட்ரோல் நிரப்ப வந்த ஆசிரியை குடும்பத்தினரை வரவேற்று அவருக்கு இடுப்புகள் கொடுத்து அவரது ஸ்கூட்டர் வாகனத்திற்கு கே. ரமேஷ்குமார் பெட்ரோல் நிரப்பி உணவு வழங்கி அனுப்பி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக கந்தசாமி மற்றும் பங்க் உரிமையாளர் மித்ரேஸ், ஆகியோர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சாமி படங்களுக்கு பூஜை செய்து இனிப்புகள் வழங்கினார்.
மேலாளர் பாலு, மற்றும் ராஜாமணி சூரியநல்லூர் ஊராட்சி முன்னாள் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பெட்ரோல் பங்க் திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
அதன் பிறகு வெள்ளிக்கிழமையன்று பெட்ரோல் டீசல் அடிக்க வந்த வாடிக்கையாளர்களுக்கு அரை கிலோ ஸ்வீட் அரை கிலோ காரம் கொடுத்தனர். இன்று வந்த வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கி ஹால்மார்க் ஏஜென்சி நிறுவனத்தினர் சிறப்பித்தனர்.