பாபநாசத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் லிபரேசன் பாபநாசம் ஒன்றிய செயலாளர் போட்டியின்றி தேர்வு….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில்
கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் லிபரேசன் பாபநாசம் ஒன்றிய மாநாடு மாநில செயலாளர் பழ.ஆசைதம்பி தலைமையில் நடைபெற்றது.

மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி வரவேற்று பேசினார்.
இம்மாநாட்டில் பாபநாசம் புதிய ஒன்றிய செயலாளராக ஆடுதுறை ப.பிரபு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் 25 ஒன்றிய குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில் மாவட்ட செயலாளர் கண்ணையன், மாநில குழு உறுப்பினர் தவச்செல்வம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, மாதர் சங்க மாவட்ட செயலாளர் விஜயாள், மாவட்ட குழு உறுப்பினர் கணேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் செங்கதிர் செல்வன் ,செந்தமிழ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
முடிவில் பாபநாசம் ஒன்றிய குழு உறுப்பினர் முருகானந்தம் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *