திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலப்ப கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் கடந்த ஆறு மாதங்களாக கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை அனுப்பும் புரோக்கர்கள் மூலம் மருத்துவ கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து தனது தோட்டத்து குடோனில் எவ்வித அனுமதியும் இன்றி வைத்துள்ளார். இரவு நேரங்களில் இந்த கழிவுகளை தீ வைத்து எரித்து வட்டல் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

இந்தக் கழிவுகளை இரவு நேரங்களில் தீ வைத்து எரிப்பதால் அப்பகுதியில் சுவாசக் கோளாறு தோல் நோய்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக பகுதி மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்த நிலையில் இன்று கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து சுஜய், ஸசீர் மற்றும் நிதீஷ் ஆகிய மூன்று பேர் மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை பொன்னுச்சாமியின் தோட்டத்திற்கு ஏற்றி வந்துள்ளனர் அப்போது லாரியை சிறைபிடித்த பகுதி மக்கள் போலீசாருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்னுச்சாமி இடம் விசாரித்தனர். இந்நிலையில் தோட்டத்துக் குடோனில் வைக்கப்பட்டுள்ள மொத்த மருத்துவக் கழிவுகளையும் முழுமையாக அகற்றாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரித்ததால் கேரளா பதிவான கொண்ட லாரியை வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் லாரியை சிறைபிடித்த பொதுமக்களிடம் பொன்னுச்சாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேஸ் தானா… போடறதுன்னா போட்டுக்கோ என அதிகாரியிடம் திமிராக பதிலளித்தார்.

மேலும் கேரளாவில் இருந்து காலவதியான மருத்துவ கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை அங்குள்ள புரோக்கர்கள் மூலம் கமிசன் தொகை அடிப்படையில் பொன்னுச்சாமி வாங்கி வந்து இரவு நேரங்களில் தீயிட்டு எரியூட்டுவதும் தெரியவந்துள்ளது.

மேலும் பொன்னுச்சாமியின் தோட்டத்து குடோனில் உள்ள அனைத்து கேரளா மருத்துவக் கழிவுகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *