கிடப்பில் கிடக்கும் சாலைப்பணிகள் விரைந்துமுடிக்க கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் இருந்து நாராயணபுரம் கல்லுப்பட்டி செல்லும் ரோடு குண்டும்குழியுமாக நீண்டகாலம் கிடந்தது பின்னர் நிதி ஒதிக்கீடு செய்து பணிகள் துவங்கியது
முதலில் இடைப்பட்ட பகுதிகளில் பாலம்கட்டும் பணிநடந்தது தற்போது பாலம்கட்டி சுமார் 3மாதங்களுக்கு மேல் ஆகியும் சாலைபணி ஆரம்பிக்காததால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் இன்னல் அடைகின்றனர்
ஆகையால் சாலைபணிகளை விரைந்து முடிக்க மாவட்டநிர்வாகம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்