கோவை கொண்டையாம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ கிட்ஸ் மழலையர் பள்ளியில் பயலும் குழந்தைகள் 20 குறள்களை 1 நிமிடம் 45 விநாடிகளில் ஒப்புவித்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்
உலக பொதுமறையான திருக்குறள் குறித்து பெரியவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை கொண்டையம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியில் உள்ள ஸ்ரீ கிட்ஸ் மழலையர் பள்ளி குழந்தைகள் திருக்குறளை ஒப்புவிக்கும் உலக சாதனை நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ப்ரீ கே ஜி எல்.கே.ஜி,மற்றும் யூ.கே.ஜி மற்றும் பயிலும் மூன்று வயது முதல் ஐந்து வயது வரையிலான மழலை குழந்தைகள் 20 திருக்குறள்களை ஒரு நிமிடம் 45 விநாடிகளில் ஒப்புவித்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
முன்னதாகஸ்ரீ கிட்ஸ் மழலையர் பள்ளியின் தாளாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில்,தலைமையாசிரியை சரஸ்வதி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக ரூபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் பள்ளியின் செயலர் மற்றும் முதல்வர் கற்பக ஜோதி,வார்டு கவுன்சிலர் மோகன் மற்றும் அவரது துணைவியார் சுப பிரியா ஆகியோர் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்வை துவக்கி வைத்தனர்.
மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இதில் ப்ரீ கே.ஜி பயிலும் 3 வயது குழந்தைகள் ஒரு நிமிடம் 20 விநாடிகளில் பத்து குறள்களையும்,மற்றும் எல்.கே.ஜி.பயிலும் குழந்தைகள் 20 குறள்களை ஒரு நிமிடம் 45 விநாடிகளிலும்,
யூ.கே.ஜி.பயிலும் 5 வயதான குழந்தைகள் 20 குறள்களை ஒரு நிமிடம் 30 விநாடிகளிலும் ஒப்புவித்து அசத்தினர்.
பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதியின் முன்னிலையில் நடைபெற்ற இதில், நோபல் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் மற்றும் பதிப்பாளர் தியாகு நாகராஜ் அறிவுறுத்தலின் படி , தீர்ப்பாளர் சிவமுருகன் கண்காணித்து மூன்று பிரிவுகளிலும் ஒட்டு மொத்த உலக சாதனை படைத்த குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்..
இந்நிகழ்ச்சியில்,பள்ளி ஆசிரியைகள் B.கீர்த்தனா, G.சேத்தனா, R.சண்முகப்பிரியா மற்றும் ரூபன் மற்றும் சாதனை குழந்தைகளின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்ட்னர்..