உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாய சங்கத்தின் தலைவர் வேலுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
அதில் அவர் கூறியிருப்பது
மத்திய அரசு பாராளுமன்றத்தில் இன்று 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததில், விவசாயிகளுக்கான கிசான் கிரிடிட் கார்டு உச்ச வரம்பை 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவதால் எந்த பலனும் இல்லை.
விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு கட்டுப்படியான குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் எனும் MSP யை அமல்படுத்தாமல்கிசான் கிரிடிட் கார்டு மூலம் கடன் உச்சவரம்பை அதிகபடுத்தி மேலும் மேலும் விவசாயிகளை கடன் சுமைக்கு ஆளாக்குகின்றனர்.
மத்திய அரசு உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை படிப்படியாக குறைத்ததால் நாட்டில் சிறு குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி அதலபாதளத்திற்கு சென்றுவிட்டது, அதனால் இந்திய உள்நாட்டு பொருளாதாரம்
பாதிக்கப்பட்டு பணவீக்க விகிதம் தொடந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் உள்நாட்டில் உற்பத்தியை பெருக்க தொலைநோக்கு திட்டம் எதுவும் இடம்பெறவில்லை.
உள்நாட்டில் உற்பத்தியை பெருக்காமல் தற்போது மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் அந்நிய பொருளாதாரம் 100 சதவீதம் ஈர்க்கப்படும் என்ற அறிவிப்பால் உள்நாட்டில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பாதிக்கப்படும். மேலும் இளைய சமுதாயத்திற்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகும் அன்னிய நேரடி முதலீடு 100 சதவீதம் என்பதால் அன்னிய நாட்டின் தொழிலாளர்களுக்கு தான் அதிகம் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வருமான வரி உச்சவரம்பை 12 லட்சமாக அதிகரித்தது, மத்திய அரசு மற்றும் மாநில அரசில் உயர் பதவி வகிப்பவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்,
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெரும் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் பயனளிக்கும். ஆனால் ஏழை எளியோர், நடுத்தர பொதுமக்களுக்கு எந்த பலனும் இல்லை மத்திய அரசு இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இந்தியா வல்லரசாக உருவாக்குவதற்கு தேவையான மிகப்பெரிய தொலைநோக்கு திட்டம் எதுவும் இடம்பெறவில்லை என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்