அரியலூர் மாவட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டி பிப்ரவரி 1 கருப்பு தினமாக அனுசரித்து கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 01.02.2025
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளான பிப்ரவரி 1ந்தேதி கருப்பு தினமாக அறிவித்து நாடு தழுவிய அளவில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்.

அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் தீர்மான முடிவின்படி மாநில அமைப்பின் வழிகாட்டுதலில் இந்தப் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடத்துகிறது.

அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்ட கிளையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்டத்தலைவர் .சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

மாநிலத்துணைத் தலைவர் மாவட்ட செயலாளர் .எழில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார் பேசினார்.

நிறைவாக நன்றியுரை .தங்க.சிவமூர்த்தி கூறினார்கள் அனைத்து ஒன்றிய வட்டாரப் பொறுப்பாளர்களும், இயக்க ஆசிரியப் பெருமக்களும் எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *