
பாபநாசம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலூர் மேட்டுத்தெருவில் காவிரி அரசலாறு தலைப்பில் அமைந்துள்ள ஸ்ரீ ராம பக்த செல்வ ஆஞ்சநேயர் ஆலயத்தில் முதலாம் ஆண்டு வருடாபிஷேகம் நடைபெற்றது.
அது சமயம் சுவாமிக்கு சிறப்பு யாகங்களும் மகாபூர்ணாஹீதி , அபிஷேகம் வடை மாலை, துளசி மாலை , அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து மகா தீபாரதனை நடைபெற்றது.
விழாவில் கும்பகோணம் காவிரி வடிநில உப கோட்டத்தின் நீர்வளத்துறை உதவி பொறியாளர் முத்துமணி, கும்பகோணம் ஆற்று பாதுகாப்பு உப கோட்டத்தின் உதவி செயற்பொறியாளர் யோகீஸ்வரன், உதவி பொறியாளர் வெங்கடேசன், மற்றும் நீர்வளத்துறை பணியாளர்கள், ஆலயஅர்ச்சகர்கள் , கிராம நாட்டாமைகள், கிராமவாசிகள் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.