கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் மினி மாரத்தான்
திருச்செங்கோடு,கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு காவல்துறையும் இணைந்து 09.02.2025 அன்று நடத்தும் மாபெரும் மினி மாரத்தான் போட்டி கே.எஸ்.ஆர் கல்வி வளாகத்தில் நடைபெற உள்ளது.

நடத்துவதற்கான முக்கிய நோக்கம் போதை மருந்து விழிப்புணர்வு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றி வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கே.எஸ்.ஆர் கல்வி வளாகத்தில் இரண்டாமாண்டு நடத்தவுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இப்போட்டியில் காலை 5.45 மணிக்கு 10 கிலோமீட்டர் ஓட்டத்தை முன்னாள் காவல் துறை தலைமை இயக்குனர் முனைவர் சைலேந்திர பாபு அவர்களும், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ராஜேஷ் கண்ணன் IPS அவர்களும், திருச்செங்கோடு பி.ஆர்.டி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் திரு. டி. டி‌. பரந்தாமன் அவர்களும் திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைக்க உள்ளனர்.

இரண்டாவதாக காலை 6.00 மணிக்கு 5 கிலோமீட்டர் ஓட்டத்தை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருமதி. பி. மகேஸ்வரி அவர்களும், நாமக்கல் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அதிகாரி எஸ். கோகிலா அவர்களும், நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் காந்திமதி அவர்களும் கூட்டப்பள்ளி, RTO அலுவலகம் அருகில் துவக்கி வைக்க உள்ளனர்.

மூன்றாவதாக காலை 7.00 மணிக்கு 2.5 மற்றும் 1 கிலோமீட்டர் ஓட்டத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாமக்கல் மாவட்ட தடகள சங்க தலைவருமான திரு. ஏ. கே. பி. சின்னராஜ் அவர்களும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை உடற்கல்வி இயக்குனரும் நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளருமான முனைவர் ஆர். வெங்கடாசலபதி அவர்களும், பாரா த்ரோபால் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் வி. ஆல்பர்ட் பிரேம்குமார் அவர்களும் கே.எஸ்.ஆர் கல்வி வளாகத்தில் துவக்கி வைக்க உள்ளனர்.

இப்போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்க சிறப்பு விருந்தினர்களாக திருச்செங்கோடு சட்டமன்றத்தின் எம். எல். ஏ திரு. ஈ. ஆர். ஈஸ்வரன் அவர்களும் நாமக்கல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வி. எஸ். மாதேஸ்வரன் அவர்களும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. எஸ். எம். மதுர செந்தில் அவர்களும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ராஜேஷ் கண்ணன் IPS அவர்களும் முன்னாள் காவல் துறை தலைமை இயக்குனர் முனைவர் சைலேந்திர பாபு அவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிகழ்வை கே. எஸ். ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு. ஆர். சீனிவாசன் அவர்கள் மற்றும் துணைத்தாளாளர் திரு. சச்சின் சீனிவாசன் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்துள்ளனர். கே. எஸ். ஆர் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர், தலைமை திட்ட நோக்க அதிகாரி, விளையாட்டுத் துறை இயக்குனர், முதல்வர்கள், உடற்கல்வித் துறை ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒத்துழைப்பில் இப்போட்டி நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *