உத்தம பாளையத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரில் சாலை பாதுகாப்பு இறுதி நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கோட்டாட்சியர் தாட்சாயினி தொடங்கி வைத்தார்
உத்தம பாளையம் மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு இறுதி வாரத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி உத்தம்பாளையம் கோட்டாட்சியர் தாட்சாயினி கொடி யசைத்து துவக்கி வைத்தார்
இந்த பேரணி உத்தம பாளையம் ஆர் டி ஒ அலுவலகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளான தேரடி பைபாஸ் தேவாரம் ரோடு புதிய தாசில்தார் ரோடு அம்மாபட்டி விலக்கு உள்ளிட்ட பிரதான வீதிகளில் சென்று பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது
ஊர்வலத்தில் கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் முக்கியமாக தலைக்கவசம் அணிய வேண்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது வாகனம் ஓட்டும்போது சாகசம் செய்து வாகனம் ஓட்டக்கூடாது மனித உயிர் விலை மதிப்பற்றது.
போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உத்தம்பாளையம் ஆர்டிஓ அதிகாரிகள் மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்