விருத்தாசலம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டுகளை கடந்த பள்ளி என்பதால் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி வளாகத்தில் நூற்றாண்டு விழா நடந்தது. விழாவிற்கு கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சரண்யா தலைமை தாங்கினார்.
விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன், விருத்தாசலம் நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தண்டபாணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் வரவேற்றார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நூற்றாண்டு சுடர் ஏற்றி வைத்து நூற்றாண்டு உறுதிமொழி எடுத்து சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவன் கவிநிலவன் என்பவர் 2024 முதலமைச்சர் கோப்பை காண மாவட்ட அளவில் நடைபெற்ற குண்டு எரிதல் போட்டியில் முதலிடம் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அவர் வருகின்ற 2027 அமெரிக்காவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். அவருக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார்.
இதில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் நன்றி கூறினார்.