அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில்
மாவீரன் ஜெ.குரு 64வது பிறந்தநாள் விழா.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம்
ஒன்றியத்தில் மாவீரன் ஜெ.குரு 64 வது பிறந்தநாள் விழா வெகு
விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக சீதாபுரம் ஊராட்சியில் உள்ள மாரியம்மா சிறப்பு பள்ளியில் பயிலும் சிறப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறுசுவை உணவு பிரியாணிமற்றும் பிஸ்கட் வழங்கினர்.
இந்நிகழ்வில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பாக்ஸர் சதீஷ் தலைமை தாங்கினார் இதில் மாவட்ட துணை செயலாளர் சதாசிவம்,
சமூக ஆர்வலர் நியூ பாப்புலர் ஒ.ஐ.வகாப், மத்திய ஒன்றிய செயலாளர் கார்த்திக்,மாவட்ட வன்னியர் சங்க துணை தலைவர் பாக்சர் சந்தோஷ்,மத்திய ஒன்றிய துணை செயலாளர் பள்ளிப்பேட்டை ப.சத்யா,வன்னியர் சங்க ஒன்றிய தலைவர் நிர்மல்குமார்,வன்னியர் சங்கம் திருஞானம்,உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.