தாராபுரம்:மதுரை திருப்பரங்குன்றம் முருகன் மலையை காத்திட இந்துக்கள் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த தமிழக அரசை கண்டித்து அண்ணா சிலை முன்பு இந்து முன்னணியினர் அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய 90- பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து முன்னணியினர்
அண்ணா சிலை முன்பு கோட்டச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். தாராபுரம் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது மதுரை வீரமிக்க மண். முருகனின் அம்சமான முத்துராமலிங்க தேவர் திருமகனார் மண். இங்கு முருகனின் மலைக்கு அவமானம் என்றால் இந்துக்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.

அதுதான் ஜனநாயகம்.திருப்பரங்குன்றத்தைக் காத்திட போராட பக்தர்களுக்கு உரிமை இல்லையா என்றும் தமிழக அரசின் ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர் அவர்களை போலீசார் அனுமதி இல்லாமல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் குண்டு கட்டாக தூக்கி பேருந்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் கொண்டு சென்று சிறை வைத்துள்ளனர். இதனால் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *