ஜெயம் லேண்ட் புரமோட்டர்ஸ் சார்பாக துவங்கப்பட்ட இதற்கான துவக்க விழாவில் ,தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன்.குமார் பங்கேற்புகோவையில் சுமார் இருபது வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாக செயல்பட்டு வரும் ஜெயம் லேண்ட் புரமோட்டர்ஸ் நிறுவனம் வீட்டு மனைகள்,விற்பனையில் பல்வேறு திட்டங்களை துவக்கி உள்ளனர்…

இந்நிலையில் கோவையை அடுத்த காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாலாஜி கார்டன்ஸ் எனும் புதிய வீட்டு மனைகள் விற்பனை திட்டத்தை ஜெயம் லேண்ட் புரமோட்டர்ஸ் துவக்கி உள்ளனர்..

சுமார் நான்கரை ஏக்கரில் துவங்கப்பட்டுள்ள இதற்கான துவக்க விழா ஜெயம் லேண்ட் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கண்ணன் என்கிற பாலசண்முகம் தலைமையில் நடைபெற்றது…

இதில் சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார்..

இந்நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினர்களாக, அன்னூர் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கவிஞர் குரு நாகலிங்கம்,பாலகிருஷ்ணன், ராஜா,நாகராஜ்,சந்திரகுமார்,மற்றும் மணிகண்டன்,குமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் சங்கம் மதுரை பிள்ளை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…

ஊட்டி செல்வதற்கு இணைப்பு சாலையாக புதிய மேற்கு புறவழிச்சாலை, சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் வருகை புதிய ஐடி நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகள் அரசின் அடுத்தடுத்த புதிய திட்டங்கள் என அசுர வளர்ச்சி பெறும் கோவையில் புதிய மனைகளை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்..

இந்நிலையில், அனைத்து வசதிகளும் பாலாஜி கார்டன்ஸ் வீட்டு மனைகள் அமைந்துள்ள இடத்திற்கு மிக அருகில் இருப்பதாகவும்,கோவையில் வசிப்பவர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநில,வெளிநாடுகளில் உள்ளோர் கோவையில் காலி மனையில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த மனைப்பிரிவுகள் நல்ல வாய்ப்பாக இருக்கும் என ஜெயம் லேண்ட் நிர்வாகத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்…

முன்னதாக துவக்க விழாவை முன்னிட்டு நீலகிரி வாழ் மக்களின் பாரம்பரிய படுகாஸ் நடனம் போன்ற சிறப்பு நிகழ்ச்சகளுடன் மற்றும் படுகாஸ் பாரம்பரிய சிறப்பு உணவுகள் பரிமாறப்பட்டன..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *