12வது ஆசிய அளவிலான உயரம் தாண்டும் போட்டியானது கடந்த 6ந் தேதி முதல் 8ம் தேதி வரை சீனாவில் நடைபெற்றது. உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ் ராம் ஜே என்பவர் போட்டியிட்டு 2.19 மீட்டர் அளவில் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.. இந்த சிறப்பான சாதனையின் மூலம் இந்திய அணிக்கு பதக்கம் பெற்றுக் கொடுத்ததுடன், இந்திய உயரம் தாண்டுதல் வரலாற்றிலும் அவர் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்..

இந்த ஆதர்ஷ் ராம் ஜே என்பவர் இயந்திரவியல் (B.Tech Mechanical) பட்டம் பெற்றுள்ளார். தற்போது மேற்கு ரயில்வேயில் மூத்த சீசிடிசி (Sr.CCTC) ஆக பணியாற்றி வருகிறார். இவர் 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய தரவரிசையில் 2.21 மீட்டர் சாதனையுடன் 2-ம் இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed