கம்பம் அருகே காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் உணவுத் திட்டத்தை துவக்கி வைத்த செயல் அலுவலர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கத்தை காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்
இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுவதை தரமாக உணவு பரிமாறப்படுகிறதா என்பதை செயல் அலுவலர் பஷீர் அகமது பார்வையிட்டார்.