தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் காலை உணவு திட்டம் முழுமையாக விரிவு படுத்தும் வகையில் அதற்கான தொடக்க விழாவை சென்னையில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்து அதேபோல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அதற்கான பணியை தொடர உத்தரவு பிறப்பித்த இருந்தார் அதனைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் சுமார் 110 தூய்மை பணியாளர்களுக்கு இட்லி, பொங்கல், சாம்பார்,வடை, கேசரி, லட்டு அடங்கிய காலை உணவை நகராட்சி நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் பணியாளர்களுக்கு வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் ஆறுமுகம், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில் குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளரும் 4 வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான ஜே.பி.ஆர்.என்ற ஜே.பாஸ்கர், நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *