தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
ஜனசக்தி நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தாசில்தாரிடம் கோரிக்கை மனு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் அமைந்துள்ள கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜனசக்தி நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்துடன் 50க்கும் மேற்பட்ட அனைத்து சமூக மக்களும் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர் அங்கு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் மின்சார வசதி இல்லாமல் படிக்க மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்
மேலும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதியும் கழிப்பறை வசதியும் இல்லாமல் சிரமப்படுகின்றனர். வீடுகளுக்கு மின் இணைப்பு பெற முற்பட்டபோது வீட்டுமனை பட்டா வீட்டு வரி ரசீது இல்லாமல் மின் இணைப்பு பெற இயலாது என மின்வாரிய அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது
இப்பகுதியில் முழுவதும் இருட்டின் காரணமாக விஷக்கடி பூச்சிகளால் சிலர் இறந்தும் உள்ளனர். ஆகையால் இப்பகுதியில் குடியிருந்து வரும் பொது மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்குவதுடன் மின்சார வசதி கழிப்பிட வசதி சாலை அமைத்துத் தர வலியுறுத்தி தாசில்தார் இடம் மனு அளித்தனர்.
இதனை பெற்றுக் கொண்ட தாசில்தார் ராமலிங்கம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் எனில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்குங்கள் உங்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சென்று தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினர்.