ஈரோடு

ஈரோட்டில் தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் மாதாந்திர விழிப்புணர்வு கூட்டம் ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள வசந்தம் பேலஸ் இன் வளாகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் சின்னராஜ் ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மனித உரிமைகள் மற்றும் தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடுகள் பற்றியும் உரை நிகழ்த்தினார்.

தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் சிறப்பாக உரையாற்றினார். இக் கூட்டத்தில் தேசிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் தமிழ் மாநிலத் தலைவர் அந்தோணி ராஜ் மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் சி மகேஸ்வரி உட்பட அனைத்து மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட, அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் என ஏராளமான மக்கள் உரிமை காப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். இவ்விழாவினை ஈரோடு மாவட்ட தலைவர் அ.ரசூல் முகைதீன் அனைவரையும் வரவேற்று சிறப்பு உரை ஆற்றினார்,

தேசிய செயலாளர் செந்தில் குமார் மற்றும் ஆனந்த் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள் ஈரோடு மாவட்ட செயலாளர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழா முடிவில் ஈரோடு மாவட்ட அமைப்பாளர் மன்சூர் அலி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *