தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் அருகே அரங்கேறிய சூதாட்ட சேவல் சண்டை – போலீஸ் நடவடிக்கை.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகேயுள்ள பெரியகுமாரபாளையம் பகுதியில் சூதாட்ட நோக்கில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது அங்கு சேவல் சண்டை நடைபெற்று வந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, குருசாமி, அரிமனோஜ், ஏகன்பரம், ஆனந்தகுமார், நட்ராஜ் ஆகிய 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

மேலும், அவர்களிடமிருந்து ரூ.3,100 ரொக்கம், 5 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *