செங்குன்றம் செய்தியாளர்
செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்பு பயிற்சிடு
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் காவலாளிகளுக்கு தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தனியார் நிறுவனங்களில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் எதுபோன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டன. மேலும் பாதுகாப்பு உபகரணங்கள், தீயணைப்பான் மற்றும் ரசாயன தீ அணைப்பான், மணல், தண்ணீர் கொண்டு தீயை கட்டுப்படுத்துவது குறித்து அப்போது எடுத்துரைக்கப்பட்டது.
தீ விபத்துகளில் கட்டிடங்களில் சிக்கியிருப்பவர்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், எவ்வாறு மீட்க வேண்டும் என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து விபத்து காலங்களில் சிறப்பாக பணியாற்றிய காவலாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்