காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

காங்கயத்தில் தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி காங்கயத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

காங்கயம் நகரப் பேருந்து நிலையம் அருகே உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேசன் தலைமை வகித்தார். இதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக, தீ தடுப்பு குறித்த பாதுகாப்பு பயிற்சி முறைகளை செயல் விளக்கத்துடன் தீயணைப்பு நிலை வீரர்கள் செய்து காண்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், காங்கயத்தைச் சுற்றியுள்ள தனியாருக்குச் சொந்தமான டெக்ஸ்டைல் நிறுவனங்களில் பணியாற்றும் பாதுகாவலர்கள் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *