தேனி மாவட்டம் கம்பத்தில் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொதுமக்களின் மருத்துவ சேவைக்காக இலவச ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு, கம்பம் தொகுதி செயலாளர் அபுதாகீர் தலைமை தாங்கினார்.கம்பம் நகரச் செயலாளர்கள் அய்யர்,சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அருண்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார் பொதுமக்களின் மருத்துவ சேவைக்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இலவச ஆம்புலன்ஸ் பொதுமக்களுக்கு நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா அர்பணிப்பு செய்தார்.
தொடர்ந்து கொடி அசைத்து ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, மருத்துவ சேவை என்பது ஒரு மகத்தான மக்கள் சேவையாகும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் இந்த ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆம்புலன்ஸ் 24 மணி நேரமும் மக்கள் சேவைக்க உள்ளது. எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம். கம்பம் தொகுதியில் இருந்து தினந்தோறும் நூற்றுக் கணக்கான பெண் தொழிலாளர்கள் கேரள மாநிலத்துக்கு ஜீப்பில் அமர முடியாத அளவுக்கு ஒருவர் மீது ஒருவர் அமர்ந்து கொண்டு தினந்தோறும் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் சென்று கூலி வேலை செய்து வருகின்றனர்.
இதைப் பார்க்கும்போது உண்மையிலே மனம் வலிக்கிறது இந்த மக்களுக்காக இந்த தொகுதி யிலேயே தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.கம்பம் தொகுதியில் இதுவரையில் அரசு கலைக் கல்லூரி,பொறியியல் கல்லூரி இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
கம்பம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை யில் நான் பிறந்த மண் இந்த மண்ணுக்காகவும் இந்தமக்களுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நமது மக்கள் முன்னேற்ற கழகம் எந்த கட்சியோடு கூட்டணி அமைத்தாலும் எங்கள் கட்சி சார்பில் கம்பம் தொகுதியில் நான் போட்டியிடுவது உறுதி.இலவச ஆம்புலன்ஸ் சேவை முதன்முதலாக தேனி மாவட்டம் கம்பத்தில் தொடங்கி வைத்துள்ளோம் தொடர்ந்து தமிழக முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலவச ஆம்புலன்ஸ் வசதி எங்கள் கட்சி சார்பில் பொது மக்கள் மருத்துவ சேவைக்காக வழங்க உள்ளோம் இவ்வாறு கூறினார்.நிகழ்ச்சியில்,கட்சியின் முதன்மைச் செயலாளர் சுரா,திரைப்பட இயக்குனர் சுருளிப்பட்டி சிவாஜி,விவசாய சங்கத் தலைவர் பொன் காட்சி கண்ணன்,உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.