தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கத்தை காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்

இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுவதை தரமாக உணவு பரிமாறப்படுகிறதா என்பதை அவர்களுடன் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் நகராட்சி ஆணையாளர் சே.தமீஹா சுல்தானா சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் அவர்களுடன் எளிமையாக அமர்ந்து உணவு அருந்தி உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்கள் இந்த நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் அசன் முகம்மது திமுக நகரச் செயலாளர் முகமது இலியாஸ் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *