கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு பகுதியில் நகர மேற்கு பகுதி பொறுப்பாளர் சலாவுதீன் அமீது தலைமையில் மாபெரும் தெருமுனைப் பிரச்சசாரம் முடீஸ் மற்றும் சோலையாறு அணைப்பகுதியில் நடைபெற்றது.

இந்த தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு தமிழ்நாடு தேயிலை தோட்டத்தொழிலாளர் பிரிவு மாநிலத் தலைவர் வால்பாறை வீ. அமீது, நகரச்செயலாளர் ம. மயில்கணேசன், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கே. டி. ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, தேர்தல் பொறுப்பாளர் டி.எல்.லட்சுமண சிங், எஸ்.பி. வசந்த் ஐடி விங் மாவட்டத் தலைவர் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஆர். நரசப்பன்,17 வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜே.மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் தலைமைக் கழக பேச்சாளர் பேராவூரணி திலீபன் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் பற்றியும் பொதுமக்களிடம் விரிவாக எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார்


இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் செந்தில் அண்ணாதுரை, சாய் கிருஷ்ணா, மாணவரணி செயலாளர் லோகேஸ்வரன், இம்மானுவேல் மற்றும் அனைவரும் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *